எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..!! தானா சேர்ந்த கூட்டம் பட பாணியில் 2 கிலோ தங்கம் கொள்ளை

 
1

சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணா நடித்து சூப்பர் ஹிட் படமான தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் என கூறி போலி அடையாள அட்டை காண்பித்து  திருடுவார்கள். இதேபோன்ற சம்பவம் தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள மோண்டா மார்க்கெட்டில் நடந்துள்ளது. நேற்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து போலி அடையாள அட்டையைக் காட்டி தங்க நகைகள் உரிய ரசீது இல்லாமல் இருப்பதாக கூறி 2 கிலோ தங்க ஆபரணங்களை கொள்ளையடித்து சென்றனர்.

தெலங்கானாவில் தானா சேர்ந்த கூட்டம் படத்தை காப்பியடித்து 2 கிலோ தங்கம் கொள்ளை

மகாராஷ்டிராவை சேர்ந்த ரிவன் மதுகர் பவார் என்பவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு செகந்திராபாத் மோண்டா மார்க்கெட்டில் பாலாஜி ஜூவல்லரி என்ற பெயரில் கடையை வைத்து நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு ரிவன் தனது சொந்த ஊருக்கு சென்ற நிலையில் ​​தனது மைத்துனரான விகாஸின் தங்கக் கடையை கவனித்துக் கொண்டிருந்தார்.

தெலங்கானாவில் தானா சேர்ந்த கூட்டம் படத்தை காப்பியடித்து 2 கிலோ தங்கம் கொள்ளை

இந்நிலையில் நேற்று  காலை வருமான வரித்துறை அதிகாரிகள்  எனக் கூறி கடைக்கு சென்றனர். வருமானவரித்துறை என்று போலி அடையாள அட்டைகளை காண்பித்து கடை முழுவதும் சோதனை மேற்கொண்டனர். விகாஸ்  மற்றும் ஊழியர்களின் செல்போன்கள் பறிக்கப்பட்டு ஓரமாக வைக்கப்பட்டது.  அதில் இருவர் விசாரணை என்ற பெயரில் விவரங்களை சேகரித்தான். மற்ற மூவரும் தங்கத்தை சோதனை செய்ய வேண்டும் எனக்கூறி  பைகளில் போட்டுக் கொண்டனர்.

தெலங்கானாவில் தானா சேர்ந்த கூட்டம் படத்தை காப்பியடித்து 2 கிலோ தங்கம் கொள்ளை

இந்த தங்கத்திற்கு வரி செலுத்தவில்லை என்றும் அதனால்  பறிமுதல் செய்கிறோம் என்றும் நம்ப வைற்று உரிமையாளருக்கு எந்தவித நோட்டீஸ்  கொடுக்காமல் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த விஷயத்தை அருகில் இருந்த கடைக்காரர்களிடம் விகாஸ் சொன்னபோது வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ய மாட்டார்கள், நோட்டீஸ் கொடுப்பார்கள் என்றார்கள். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விகாஸ் மோண்டா மார்க்கெட் போலீசில் புகார் செய்தார். சிசிடிவி கேமராவை சோதனை செய்த போலீசார் கொள்ளையர்கள் செகந்திராபாத் வழியாக உப்பல் நோக்கி சென்றது தெரியவந்தது.

தெலங்கானாவில் தானா சேர்ந்த கூட்டம் படத்தை காப்பியடித்து 2 கிலோ தங்கம் கொள்ளை

இந்த வழக்கை தீவிரமாக எடுத்துக்கொண்ட போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து கொள்ளை கும்பலை தேடி வந்தனர்.  ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் குற்றவாளிகளைத் தேடும் பணி நடைபெறுவதாக உதவி ஆணையர்  ரமேஷ் தெரிவித்தார்.  புதிதாக வருபவர்கள் அதிகாரிகள் போல் நடித்து கடைகளுக்குள் நுழைந்தால் கடைக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்

From Around the web