உறவினர்களுடன் உடலுறவு கொள்ள வற்புறுத்திய கணவன்- மனைவி எடுத்த முடிவு..!

 
நேத்ரா மற்றும் கொலை செய்யப்பட்ட ஸ்வாமி ராஜ்

மாற்று உறவுமுறைக்கு தொடர்ந்து வற்புறுத்தி வந்த கணவனை கொடூரமாக கொலை செய்துவிட்டு மனைவி காவல்துறையில் சரணடைந்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.

கர்நாடகாவில் ஹரோக்யதானஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்வாமி ராஜ். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர், நேத்ரா என்கிற பெண்ணை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். கடந்த சில ஆண்டுகளாகவே கணவன் - மனைவிக்கு இடையில் பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது

இந்நிலையில் கடந்த 7-ம் தேதி இரவு கணவனை இரும்புக் கம்பியால் தாக்கி கொன்றுவிட்டதாக கூறி மதனயாகனஹள்ளி போலீஸில் மனைவி நேத்ரா தானாகவே சரணடைந்தார். இதுதொடர்பாக விசாரித்த போது அவர் கூறிய காரணங்கள் போலீசாரை அதிர்ச்சி அடையச் செய்தன.

கணவர் ஸ்வாமி ராஜ் தனது மனைவியை உறவினர்களுடன் உடலுறவு கொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நேத்ரா கடந்த சனிக்கிழமை இரவு கணவன் தூங்கிக் கொண்டிருந்த போது, இரும்புக்கம்பியால் தாக்கி அவரை கொலை செய்துவிட்டதாக வாக்குமூலம் அளித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஸ்வாமி ராஜின் முதல் மனைவி சத்யகுமாரியிடம் போலீசார் விசாரித்துள்ளனர். 5 ஆண்டுகளுக்கு முன்பு நேத்ரா, ஸ்வாமி ராஜ் திருமணம் செய்துகொண்டனர். இருவருக்குமிடையில் அடிக்கடி சொத்து தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.

From Around the web