மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவர் போலீசாரால் கைது...!

 
மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவர் போலீசாரால் கைது...!

குடும்பத் தகராறில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சேலம் மன்னார் பாளையத்தை சேர்ந்த பாஸ்கரனுக்கு கல்பனா என்கிற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். கணவன் மற்றும் மனைவிக்கு இடையே இருந்து வந்த பிரச்னை காரணமாக இருவரும் தனித்தனியே வாழ்ந்து வந்துள்ளனர்.

ஒரே வீட்டில் இருந்து கொண்டு தரை தளத்தில் கல்பனா வசிக்க தொடங்கியுள்ளனர். கணவர் பாஸ்கரன் மேல் தளத்தில் இருந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே இருவருக்குமிடையே தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல பாஸ்கரனுக்கும் கல்பனாவுக்கும் இடையில் மீண்டும் பிரச்னை எழுந்துள்ளது. அப்போது காய்கறி வெட்ட வைத்திருக்கும் கத்தியால் மனைவி கல்பனாவின் கழுத்தை அறுத்துள்ளார் பாஸ்கரன்.

இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் அவர். அதை தொடர்ந்து தகவலறிந்த போலீசார் கல்பனாவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். அதை தொடர்ந்து பாஸ்கரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

From Around the web