கள்ளக்காதலுக்காக மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர் கைது..!!

 
கள்ளக்காதலுக்காக மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர் கைது..!!

கள்ளக்காதலுக்காக கட்டிய மனைவிய கணவனே கழுத்தை நெறித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவைச் சேர்ந்த பிரவீன்குமார் என்பவருக்கு 3 ஆண்டுகள் முன்பு கோலார் பகுதியைச் சேர்ந்த சாந்தா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. கடந்த வாரம் ஓசூரில் நடைபெற்ற திருவிழாவில் கலந்துகொண்டனர். அதை தொடர்ந்து அதே பகுதியில் இருந்த உறவினர் வீட்டுக்கு வந்து தங்கியுள்ளனர்.

கடந்த புதன்கிழமை கணவன், மனைவிக்கு இடையே நீண்ட நேரமாக சண்டை நடந்துள்ளது. அப்போது ஆத்திரத்தில் சாந்தாவின் கழுத்தை நெறித்து கணவன் பிரவீன்குமார் கொலை செய்துவிட்டார். உடனடியாக தனது நண்பருக்கு போன் செய்து மனைவிக்கு உடம்பு சரியில்லை என்று கூறி வரவழைத்துள்ளார். 

பிறகு அந்த நண்பரும் ஆம்புலன்ஸை வரவழைத்து பிரவீன்குமாருக்கு உதவி செய்துள்ளார். பிறகு சாந்தாவை ஆம்புலன்ஸில் ஏற்றி பிரவீன்குமார் மட்டும் கோலாருக்கு சென்றுள்ளார். அங்கு சாந்தாவின் பெற்றோரை சந்தித்து மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறி உடலை கொடுத்துவிட்டு பிரவீன்குமார் தலைமறைவாகிவிட்டார்.

இதனால் சந்தேகமடைந்த சாந்தாவின் பெற்றோர், பிரவீன்குமார் மீது போலீசாருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் சாந்தாவின் உடலை உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்தனர். அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதை தொடர்ந்து பிரவீன்குமாரை தேடும் பணியில் போலீசார் மும்முரமாகினர்.

ஓசூர் அருகே இருந்த பிரவீன்குமாரை கைது செய்த காவல்துறை சாந்தா கொலை செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்தினர். வேறு ஒரு பெண்ணுடன் தனக்கு கள்ளத்தொடர்பு இருந்தது. அது சாந்தாவுக்கு தெரியவந்ததை அடுத்து தன்னிடம் சண்டை போட்டதாகவும், அதனால் எழுந்த ஆத்திரத்தில் கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டதாகவும் கூறினார். அதை தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் பிரவீன்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

From Around the web