ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம் - இதற்கு ஆசைப்பட்டு ரூ.50,000 இழந்த பாட்டி  !!

 
ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம் - இதற்கு ஆசைப்பட்டு ரூ.50,000 இழந்த பாட்டி  !!

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் வசித்து வருபவர் சர்மா என்ற 58 வயது மூதாட்டி, தனது வீட்டில் பெரும்பாலும் சமையல் செய்வதில்லை. மாறாக, இணையத்தில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களை தேடித்தேடி வாங்கி உண்டு மகிழ்ந்து வந்தார். 

இந்நிலையில், சமூக ஊடகம் ஒன்றில், ரூ.250-க்கு ஒரு சாப்பாடு வாங்கினால், ஒரு சாப்பாடு இலவசம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால், அந்த உணவை வாங்க சர்மா முடிவு செய்தார். அதில் குறிப்பிட்ட போன் நம்பருக்கு போன் செய்து, அவர்கள் கூறியபடி, வெப்சைட்டில் குறிப்பிட்ட படிவத்தில், முகவரி மற்றும் ஏடிஎம் கார்டின் பின் நம்பர் போன்ற விவரங்களை நிரப்பி அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில், அவரது கார்டில் இருந்து 49,996 ரூபாய் பணம் எடுக்கப்பட்டு உள்ளதாக அவருக்கு குறுந்தகவல் வந்துள்ளது.

இதனைப்பார்த்து, அதிர்ச்சி அடைந்த சர்மா, அந்த ஹோட்டல் நம்பருக்கு போன் செய்த போது, அந்த செல் நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அவர் மேலும் அதிர்ச்சி அடைந்தார்.  தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சர்மா, இது தொடர்பாக பெங்களூரு போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

From Around the web