30 ஆண்டுகளாக சடலங்களைக்கூட விட்டுவைக்காத காமகொடூரன்! போலீஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

 
1

1987-ம் ஆண்டு இங்கிலாந்தின் கென்ட் கவுன்டியில் உள்ள டன்பிரிட்ஜ் வெல்ஸ் நகரத்தில், வென்டி நெல் (வயது 25) மற்றும் கரோலின் பியர்ஸ் (வயது 20) எனும் இரண்டு இளம் பெண்கள் 5 மாத இடைவெளியில் அடுத்தடுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு, அவர்கள் வசித்துவந்த இடத்திலிருந்து ஒரு மைல் தூரத்தில் ஆடைகளின்றி பிணமாக கண்டெடுக்கப்பட்டனர்.

இருவரும் கொலை செய்யப்பட்ட பிறகு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருந்தது உடற்கூராய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

பிரித்தானியாவில் ‘பெட்சிட் மர்டர்’ என்று பிரபலமாக அறியப்படும் இந்த கொலை வழக்கில், 34 ஆண்டுகள் கழித்து, கடந்த டிசம்பர் மாதம் கிழக்கு சசெக்ஸின் ஹீத்ஃபீல்டில் இருந்து டேவிட் ஃபுல்லர் எனும் 67 வயது நபர் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டார்.

விசாரணைக்கு பிறகு அவர் மீதான குற்றங்கள் நிருபிக்கப்பட்ட நிலையில், அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இந்த வழக்கு இம்மாதம் நீதிமன்ற விசாரணைக்கு வரவுள்ள நிலையில், பெரும் திருப்பமாக, டேவிட் ஃபுல்லர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக செய்துவந்த கேவலமான குற்றங்கள் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளன.
 
போலீசார் அவரது முகவரியில் சோதனை நடத்தியபோது, அவரது வீட்டில் கவனமாக மறைத்து சேமித்து வைக்கப்பட்டிருந்த பல ஹார்டு டிரைவ்கள் மற்றும் புகைப்படங்கள் கிடைத்தன.

அதனை முழுவதுமாக ஆய்வு செய்ததில், டேவிட் வேலை பார்த்த கென்ட் மற்றும் சசெக்ஸ் மருத்துவமனை மற்றும் டன்பிரிட்ஜ் வெல்ஸ் மருத்துவமனை பிணவறைகளில், சடலங்களுடன் உடலுறவு கொண்டு அதனை புகைப்படங்கள் எடுத்து வீட்டில் சேமித்துவந்துள்ளார். இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை மேலும் நீட்டிக்கப்படுகிறது.

From Around the web