தமிழகளவில் பரபரப்பை கிளப்பிய கன்னியாகுமரி காசி வழக்கில் தீர்ப்பு வழங்கியும் திமிர் குறையாத ’கன்னியாகுமரி’ காசி..!!

 தமிழகளவில் பரபரப்பை கிளப்பிய கன்னியாகுமரி காசி வழக்கில் மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
 
kasi

கன்னியாகுமர் மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் சுஜி என்கிற காசி (26). கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த தங்க பாண்டியன் என்பவருடைய மகன். பொறியியல் படிப்பு படித்துவிட்டு, வேலைக்கு போகாமல் தந்தையுடன் சேர்ந்து வணிக விஷயங்களை கவனித்து வந்துள்ளார்.

வசீகரமான தோற்றத்துடன் இருந்தால், தன்னிடம் விரும்பி பேச வரும் பெண்களை வலையில் வீழ்த்தி அவர்களுடன் நெருக்கமாக இருந்து அதை புகைப்படமாகவும் வீடியோவாகவும் எடுத்துக் கொள்வார். பின்பு, அதை காட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபடுவது காசியின் வழக்கமாக இருந்துள்ளது.

சராசரி பெண்கள் மட்டுமில்லாமல், முக்கிய பிரமுகர்களின் மனைவிகள், கல்லூரி மாணவிகள் உட்பட பலரும் காசியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரிடம் காசி தனது சித்து விளையாட்டைக் காட்ட, அவர் தைரியமாக காவல்துறையில் ஆதாரத்துடன் புகார் கொடுத்துவிட்டார். 

kasi

இதையடுத்து காசியை கைது செய்து காவல்துறை விசாரித்தபோது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இந்த சம்பவத்துக்கு பிறகு காசியால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர்  அடுத்தடுத்து புகார் அளிக்க துவங்கினர். அதன்படி காசி மீது ஒரு போக்சோ வழக்கு உட்பட பாலியல் வன்புணர்வு, பாலியல் சீண்டல், கொலை மிரட்டல், கந்து வட்டி மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளும் பதிவாகியுள்ளன.

பிசிஐடி காவல்துறை அவர் மீதான வழக்குகளை பதிவு செய்து, காசியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தது. நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி சசிரேகா முன்பு காசி பாலியல் வழக்கு குறித்த விசாரணை அனைத்தும் நடத்தப்பட்டு வந்தது.

இவ்வழக்கில் தொடர்புடைய 10-க்கும் மேற்பட்ட சாட்சியங்கள் நேரில் வந்து வாக்குமூலம் அளித்துள்ளனர். முதன்முதலில் புகார் கொடுத்த மருத்துவ மாணவியும் சாட்சியம் அளித்தார். தொடர்ந்து 3 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கு விசாரணையை கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றம் மேற்பார்வை செய்து வந்தது.

kasi

இந்நிலையில் நேற்று இவ்வழக்கில் கன்னியாகுமரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. வழக்கின் தீவிரம், சாட்சியங்கள் மற்றும் குற்றப்பத்திரிக்கை உள்ளிட்டவற்றை ஆராய்ந்த நீதிபதி ஜோசப் ஜாய் குற்றவாளி காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும் மற்றும் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார். விசாரணைக்காக பாளையங்கோட்டை சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட குற்றவாளி காசி, மீண்டும் பாளையங்கோட்டை சிறைக்கே அனுப்பப்பட்டார். 

இவ்வழக்கில் மகனுக்கு எதிராக சாட்சி அளிக்க தயாராக இருந்தவர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற வழக்கில், காசியின் தந்தை தங்க பாண்டியனும் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

From Around the web