பாலியல் தொந்தர கொடுத்த மர்ம ஆசாமி யார்..?? 

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்ந்த கர்ப்பிணி பெண்ணின் கையை பிடித்து இழுத்து பாலியல் தொந்தரவு கொடுத்த மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 
 man on search

திருவனந்தபுரம் மாவட்டத்தில் தம்பனூர் என்கிற பகுதியில் கடந்த 12-ம் தேதி காலை 11 மணியளவில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அவரை மர்ம நபர் ஒருவர் பின் தொடர்ந்து சென்றுள்ளார். பெண் வேகமாக நடக்க துவங்கியதும், அவரும் வேகமாக நடந்துள்ளார்.

இதனால் அச்சம் அடைந்து கர்ப்பிணி பெண் கத்தியதும், அந்த நபர் அங்கே இருந்து ஓடிவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அந்த கர்ப்பிணி பெண் எந்த புகாரும் அளிக்கவில்லை. ஆனால் இதுகுறித்து தகவல் அறிந்ததும் தம்பனூர் பகுதி போலீஸ், பெண்ணிடம் விசாரணை நடத்தியது.

அவர் எல்லா விவரங்களை சொல்லியுள்ளார். உடனடியாக சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களை ஆராய்ந்தபோது, 40 வயது மதிக்கத்தக்க ஆசாமி ஒருவர் வெள்ளை சட்டை, சாம்பல் நிற பேண்டு அணிந்து கர்ப்பிணிப் பெண்ணை பின் தொடரும் காட்சிகள் பதிவாகி இருந்தன.

தம்பனூர் பகுதியில் நிறைய தமிழர்களும் வடமாநிலத்தவர்களும் உள்ளனர். நிச்சயமாக உள்ளூர்வாசி யாரும் இப்படி செய்திருக்க முடியாது என்று காவல்துறை நம்புகிறது. அதனால் இந்த வழக்கில் தமிழ்நாடு போலீஸ் உதவியை நாட கேரள காவல்துறை முடிவு செய்துள்ளது. 
 

From Around the web