அறியாத வயதில் திருமணம்; தற்கொலையில் முடிந்த சோகம்..!

 
அறியாத வயதில் திருமணம்; தற்கொலையில் முடிந்த சோகம்..!

காதலித்து திருமணம் செய்துகொண்ட தம்பதிக்கு இடையில் ஏற்பட்ட சண்டையால் மனைவி தற்கொலை செய்து இறந்துவிட, அவருடைய கணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மற்றும் உமாதேவி இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். உமாதேவிக்கு 16 வயது இருக்கும்போதே பாலகிருஷ்ணன் திருமணம் செய்து கொண்டார். இதனால் அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் இருந்து வெளியே வந்ததும் உமாதேவிக்கு 18 வயது பூர்த்தி அடைந்த நிலையில் இரண்டு வீட்டாரும் பேசி திருமணம் செய்துவைத்தனர். திருமணம் முடிந்து மதுரை ஜீவா நகரில் ஐந்து மாதங்களுக்கு முன்பு தம்பதிகள் குடியேறியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே இருவருக்குமிடையில் பிரச்னை இருந்து வந்துள்ளது.

கடந்த 12-ம் தேதி வழக்கம் போல பாலகிருஷ்ணன் மற்றும் உமா தேவிக்கு இடையில் சண்டை உருவானது. இதனால் மன வேதனை அடைந்த உமாதேவி அன்று இரவு தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். பாலகிருஷ்ணன் கண் விழித்துப் பார்த்த போது மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளார்.

இதனால் பயந்து போன பாலகிருஷ்ணன் அவரும் தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். அப்போது பாலகிருஷ்ணனின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் மதுரை ஜீவா நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

From Around the web