ஏழு வயது மகளுடன் மலையில் இருந்து குதித்து தாய் தற்கொலை..!

 
ஏழு வயது மகளுடன் மலையில் இருந்து குதித்து தாய் தற்கொலை..!

கோயிலுக்கு செல்வதாக கூறிவிட்டு மலை உச்சிக்கு சென்று ஏழு வயது மகளுடன் குதித்து தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் பால்வண்ணநாதபுரத்தைச் சேர்ந்தவர் தேவபுத்திரன். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், 7 வயதான மணிஷா என்கிற மகளும் இருந்தனர். இந்நிலையில் கடந்த 20-ம் தேதி தோரணமலை முருகன் கோயிலுக்கு செல்வாக கூறி மகளை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார் லட்சுமி தேவி.

அதை தொடர்ந்து அன்று இரவு வரை மனைவியும் மகளும் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சம் அடைந்த கணவர் தேவபுத்திரன் தென்காசி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதை தொடர்ந்து போலீஸார் இருவரையும் தேடும் பணியை தொடங்கினர்.

அப்போது தோரணமலை முருகன் கோயில் அமைந்துள்ள மலையில் வடதுபுறத்தில் தாய் மகளின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதை தொடர்ந்து போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

அதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் லட்சுமி தேவிக்கு ஒரு மாத காலமாகவே மனநலம் சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால் மகளை அழைத்துக் கொண்டு தோரணமலை முருகன் கோயிலுக்கு வந்த அவர், மலையில் வடதுபுற் உச்சியில் இருந்து சுமார் 150 அடி உயரத்தில் இருந்து மகளுடன் சேர்ந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று தெரியவந்தது.

இதையடுத்து லட்சுமி தேவியின் தற்கொலை முடிவுக்கு வேறு என்ன காரணம் உள்ளது உட்பட பல்வேறு கோணங்களில் இந்த வழக்கினை போலீஸார் விசாரித்து வருகின்றனர். 
 

From Around the web