சூட்கேஸில் கிடந்த இளம்பெண் சடலம்- 4 போலீசார் இடைநீக்கம்..!
 

 
பெண் சடலம்

சேலத்தில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டு சூட்கேஸில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் 4 காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் அருகேவுள்ள அஸ்தம்பட்டியில் இளம்பெண்ணின் சடலம் கிடந்தது. இதை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் அஸ்தம்பட்டி உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கலைச்செல்வன், சேகர் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக காவல் ஆணையர் நஜ்மல் ஹூடா வெளியிட்டுள்ள உத்தரவில், இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள 4 காவலர்களும் அடிக்கடி தொலைபேசியில் இறந்த பெண்ணுடன் பேசி வந்தது தெரியவந்துள்ளது. விசாரணை நேர்மறையாக நடப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நஜ்மல் ஹூடா வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From Around the web