மனைவியுடனான தகராறில் தந்தை சுட்டத்தில் கர்ப்பிணி மகள் பரிதாப பலி..!

 
மனைவியுடனான தகராறில் தந்தை சுட்டத்தில் கர்ப்பிணி மகள் பரிதாப பலி..!

கிருஷ்ணகிரியில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தந்தை துப்பாக்கியால் சுட்டத்தில் 3 மாத கர்ப்பிணி மகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஒசூர் அருகேவுள்ள மாதையன் தொட்டியைச் சேர்ந்த அருணாச்சலம் தனது மனைவி மாதேவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். பெற்றோரின் சண்டையை தடுக்க அவர்களுடைய மூன்று மாத கர்ப்பிணி மகள் வெங்கடலட்சுமி முயன்றுள்ளார். அப்போது அருணாச்சல் வீட்டில் உரிமம் பெறாமல் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வந்து மனைவியை நோக்கி சுட்டுள்ளார்.

இதில் தாயின் உயிரை காப்பாற்ற வெங்கடலட்சுமி இடையில் பாய்ந்துள்ளார். இதனால் குண்டு அவருடைய நெஞ்சை துளைத்தது. உடனடியாக வெங்கடலட்சுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

மகள் இறந்துபோனதை அறிந்த அருணாச்சலம் தலைமறைவாகிவிட்டார். இந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்துள்ள ஒசூர் காவல்துறை தலைமறைவான அருணாச்சலத்தை தீவிரமாக தேடி வருகின்றனர். 
 

From Around the web