பிரபல பின்னணிப் பாடகி மகளுக்கு பாலியல் தொல்லை- பாதிரியார் போக்சோவில் கைது..!

 
பிரபல பின்னணிப் பாடகி மகளுக்கு பாலியல் தொல்லை- பாதிரியார் போக்சோவில் கைது..!

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் பின்னணிப் பாடகியின் 15 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் பாதிரியார் உட்பட உறவினர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் சினிமா பாடல்கள் பாடி வரும் பின்னணிப் பாடகி ஒருவர் தன்னுடைய 15 வயது மகளை சென்னையிலுள்ள ஒரு உறவினர் வீட்டில் தங்க வைத்துள்ளார். 

அப்போது அந்த வீட்டில் இருந்தவர்கள் உட்பட பாதிரியார் ஒருவர் தன்னுடைய மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கீழ்ப்பாக்கம் மகளிர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் பாடகி புகாரளித்த பாதிரியார் ஹென்றி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அந்த சிறுமிக்கு 8 ஆண்டுகளாக உறவினர்கள் சிலர் பாலியல் தொல்லை அளித்துள்ளனர்.

அதை தொடர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார் உட்பட உறவினர்களையும் மகளிர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தேசியளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

From Around the web