முன்னாள் காதலனை கொலை செய்ய +2 மாணவி செய்த அதிர்ச்சி காரியம்..!

 
முன்னாள் காதலனை கொலை செய்ய +2 மாணவி செய்த அதிர்ச்சி காரியம்..!

நெல்லையை சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி முன்னாள் காதலனை கொல்வதற்காக கூலி படையை ஏவி விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை களக்காடு அருகேவுள்ள பணக்குடி புஷ்பவனம் என்கிற கிராமத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி, தன்னுடன் படிக்கும் விக்னேஷ் என்கிற மாணவனை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவிக்கு வேறொரு மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் விக்னேஷனை உதாசீனப்படுத்தி வந்துள்ளார்.

மாணவியின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த காதலன் விக்னேஷ், மாணவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை காட்டி அவரை மிரட்டியதோடு, வீட்டிலும் சொல்லிவிடுவேன் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவி முன்னாள் காதலன் விக்னேஷனை கொலை செய்ய கூலிப்படையினர் உதவியை நாடியுள்ளார்.

ஆசை வார்த்தைகள் கூறி விக்னேஷனை பெத்தானியா மலைப்பகுதிக்கு மாணவி அழைத்து வந்துள்ளார். அங்கே திடீரென கூலிப்படையினர் வந்துள்ளனர். மேலும் வெடிகுண்டு, அரிவாள், கத்தி உள்ளிட்ட பொருட்களை காட்டி கூலிப்படையினர் விக்னேஷை மிரட்டி மாணவியை தொந்தரவு செய்யாமல் விட்டுவிடும்படி கூறியுள்ளனர். அப்போதைக்கு அவர்கள் சொல்வதை கேட்பது போல நடித்த விக்னேஷ உடனடியாக அங்கிருந்து ஓடி வந்துவிட்டார்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மாணவி  மற்றும் தன்னை மிரட்டிய கூலிப்படையினர் மீது விக்னேஷ் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். விக்னேஷ் தெரிவித்த தகவலின்படி சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை  மலைப்பகுதியில் பதுங்கியிருந்த கூலிப்படையினர் 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தப்பியோடிய மாணவியை போலீசார் தேடி வருகின்றனர். 

From Around the web