மனைவியை அனுப்ப மறுத்த மாமனாரை ஒரு கை பார்த்த மருமகன்..!

 
மனைவியை அனுப்ப மறுத்த மாமனாரை ஒரு கை பார்த்த மருமகன்

மனைவியை வீட்டுக்கு அனுப்பமால் தனது வீட்டில் வைத்துக் கொண்ட மாமனாரை வெட்டிக் கொல்ல முயன்ற மருமகனை போலீசார் கைது செய்தனர்.

சென்னையை அடுத்துள்ள மறைமலைநகரை சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜேந்திரன் (41). இவருடைய மனைவி சத்யா (35) கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் திருமுல்லைவாயல் பகுதியிலுள்ள தந்தை முனியன் (65) வீட்டுக்கு சென்றுவிட்டார்.

பலமுறை ராஜேந்திரன் மனைவி சத்யாவை வீட்டுக்கு வருமாறு அழைத்துப் பார்த்தார். ஆனால் சத்யா மறுத்து வந்துள்ளார். சமீபத்தில்  முனியன் இறைச்சி கடைக்கு வந்து மாமனார் முனியனிடம்,  சத்யா மற்றும் குழந்தைகளை வீட்டுக்கு அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது அருகே இருந்த கத்தியை எடுத்து முனியனை ராஜேந்திரன் வெட்டிவிட்டார். இதனால் மார்பில் காயமுற்ற அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். உடனே ராஜேந்திரன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

உடனே அருகிலிருந்தவர்கள் முனியனை மீட்டு, ஆவடி உள்ள அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.  அவர் அளித்த புகாரின் பேரில் திருமுல்லைவாயல் போலீசார் ராஜேந்திரனை கைது செய்தனர். தற்போது அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

From Around the web