தோழியுடன் வசித்து வரும் தாய் நரபலி கொடுக்க முயற்சிப்பதாக மகன்கள் புகார்..!

 
தோழியுடன் வசித்து வரும் தாய் நரபலி கொடுக்க முயற்சிப்பதாக மகன்கள் புகார்..!

தந்தையை பிரிந்து தோழி ஒருவருடன் தனியாக வசித்து வரும் தாய் தங்களை நரபலி கொடுக்க முயற்சிப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிறார்கள் இருவர் புகார் அளித்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவருக்கு ரஞ்சிதம் மற்றும் இந்துமதி என இரண்டு மனைவிகள் உள்ளனர். இரு மனைவிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்த போது இந்துமதியின் தோழியான தனலட்சுமியுடன் ரஞ்சிதத்திற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பிறகு கணவரை விட்டு பிரிந்த ரஞ்சிதம் தனது இரண்டு மகன்களையும் உடன் வைத்துகொண்டு தோழி தனலட்சுமியுடன் சேர்ந்து ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். அந்த வீட்டில் இருந்து தப்பித்த இரண்டு சிறார்களும் பாட்டி வீட்டில் தஞ்சமடைந்துள்ளனர். 

அதை தொடர்ந்து பாட்டி வீட்டார் சிறுவர்கள் இருவரையும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து வந்துள்ளனர். தனலட்சுமியும் தாய் ரஞ்சிதமும் தங்களை கொடுமைப்படுத்துவதாகவும், தங்கள் இருவரையும் நரபலி கொடுக்க முயற்சிப்பதாகவும், அதை கேட்டவுடன் தப்பிடித்து வந்துவிட்டதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளனர். 

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள ஈரோடு ரங்கம்பாளையத்தைச் சேர்ந்த காவல்துறை, விரைவில் தனலட்சுமி மற்றும் ரஞ்சிதம் ஆகியோரிடம் விசாரணை நடத்தவுள்ளதாக தெரிகிறது. 

From Around the web