வயது முதிர்ந்த தாயை இரக்கமின்றி மகனே முட்புதரில் வீசிச் சென்ற கொடூரம்...!

 
வயது முதிர்ந்த தாயை இரக்கமின்றி மகனே முட்புதரில் வீசிச் சென்ற கொடூரம்...!

திருவள்ளூரில் பெற்ற தாயை மகனே முட்புதருக்குள் வீசிவிட்டு சென்ற கொடூர சம்பவம் நெஞ்சை பதறவைத்துள்ளது.

பொன்னேரியை அடுத்து  ஏலியம்பேடு பகுதியில் இருக்கும் முட்புதருக்குள் ஒரு பெண்ணின் சத்தம் கேட்டுள்ளது. உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் புதருக்குள் சென்று பார்த்த போது வயது முதிர்ந்த மூதாட்டி மண் தரையில் கிடந்துள்ளார். அந்த பகுதி மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மூதாட்டியிடம் விசாரித்தனர். தான் மணலி சேக்காடு பகுதியைச் சேர்ந்த காந்திமதி என்று தெரிவித்துள்ளார். குடும்பத்திற்கு பாரமாக இருப்பதாக கூறி தன்னுடைய இரண்டாவது மகன் சங்கர் இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து இந்த முட்புதருக்குள் வீசி விட்டு சென்றதாக வேதனையுடன் தெரிவித்தார்.

இதனால் மனம் வருந்திய காவல்துறை அவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மூதாட்டி உடல்நல பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பெற்ற தாயை முட்புதருக்குள் வீசி சென்ற இரக்கமன்ற அந்த மகனின் செயல் அப்பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

From Around the web