தவறை தட்டிக்கேட்ட நபரின் காதை கடித்து துப்பிய குடிகாரர்..!

 
தவறை தட்டிக்கேட்ட நபரின் காதை கடித்து துப்பிய குடிகாரர்..!

தகாத வார்த்தைகளை பேசி தாய் மற்றும் சகோதரனிடம் ரகளையில் ஈடுப்பட்டவரை தட்டிக் கேட்டவரின் காது கடித்து துப்பப்பட்ட சம்பவம் விருதுநகரில் நடந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் மலையடிப்பட்டி என்கிற பகுதியில் புதியதாக வீடு பார்த்து குடி புகுந்துள்ளார். நேற்று இரவு குடித்துவிட்டு வீடு திரும்பிய ராமமூர்த்தி தாய் மற்றும் சகோதரனுடன் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் தகாத வார்த்தைகளை பேசியதை கேட்க சகிக்காமல் அருகில் வசிக்கும் மாரியப்பன் என்பவர் தட்டி கேட்டுள்ளார்.

இதனால் அவர்கள் இருவருக்கும் சண்டை ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியுள்ளது. சற்றும் எதிர்பாராதவிதமாக குடிபோதையில் இருந்த ராமமூர்த்தி மாரியப்பனின் இடது புற காதை கடித்து துப்பிவிட்டார். வலியால் துடித்த மாரியப்பனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ராமமூர்த்தி மற்றும் அவருடைய குடும்பத்தினரை பிடித்து போலீசாரிடம் அக்கம் பக்கத்தினர் ஒப்படைத்தனர்.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள வடக்கு காவல்துறை ராமமூர்த்தி மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ராஜபாளையம் மலையப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

From Around the web