காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அண்ணனை கூலிப் படை ஏவி தீர்த்து கட்டிய பிரபல நடிகை..!

 
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அண்ணனை கூலிப் படை ஏவி தீர்த்து கட்டிய பிரபல நடிகை..!

சினிமாவில் வளர்ந்து வரும் பிரபல நடிகை ஒருவர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தன்னுடைய அண்ணனை கூலிப் படை ஏவி படுகொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலத்திலுள்ள தார்வார் என்ற பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆண் ஒருவரின் துண்டிக்கப்பட்ட கை, கால்கள் போலீசாருக்கு கிடைத்தன. அதை விசாரித்த போது கொலை செய்யப்பட்ட நபர் ராகேஷ் என்பது தெரிய வந்தது.

இவர் மிஸ். கர்நாடகா பட்டம் வென்ற ஷான்யாவின் உடன்பிறந்த மூத்த சகோதரர் ஆவார். தற்போது ஷான்யா இந்திப் படங்களில் நடித்து வருகிறார். ராகேஷின் செல்போனுக்கு வந்த அழைப்பை வைத்து இந்த கொலை சம்பவம் தொடர்பாக நடிகை ஷான்யாவிடம் போலீசார் விசாரித்தனர்.

அப்போது ராகேஷை கொலை செய்தது ஷான்யா தான் என்பது தெரிய வந்தது. உடன் பிறந்த அண்ணன் என்று பாராமல் கூலிப் படையினரை ஏவி விட்டு அவர் கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது.

நடிகை ஷான்யாவுக்கும் அவருடைய மேலாளர் நியாஜ் அகமது என்பவரும் நீண்ட மாதங்களாக் காதலித்து வந்துள்ளனர். இதை ராகேஷ் எதிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷான்யா கூலிப் படையினரை ஏவி விட்டு ராகேஷை கொலை செய்துள்ளார்.

தற்போது நடிகை ஷான்யா அவருடைய காதலர் நியாய் அகமது உள்ளிட்ட 8 பேரை கர்நாடக காவல்துறை கைது செய்துள்ளது. இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட விசாரணைப் பணிகளை காவல்துறையினர் தொடங்கியுள்ளனர். 

From Around the web