யாருக்கும் தெரியாமல் பெற்ற குழந்தையை மண்ணில் புதைத்த சிறுமி..!

 
யாருக்கும் தெரியாமல் பெற்ற குழந்தையை மண்ணில் புதைத்த சிறுமி

யாருக்கும் தெரியாமல் குழந்தையை பெற்ற 17 வயது, குழந்தையை மண்ணில் புதைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியிலுள்ள வீட்டுக்கு பின்னால் மண்ணில் புதைந்த நிலையில் ஆண் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. உடலை கைப்பற்றிய போலீசார் வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தி வந்தனர்.

அதில் 17 வயது சிறுமிக்கு சமீபத்தில் இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்தது.  அதையடுத்து சிறுமியே உடலை மண்ணில் புதைத்துள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரித்தத்தில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்த போது அபிமன்யு என்கிற இளைஞருடன் அவர் பழகி வந்துள்ளார். 

பிறகு சிறுமி தரங்கம்பாடிக்கு வந்ததை அடுத்து அபிமன்யுடனான பழக்கம் முறிந்துள்ளது. இதற்கிடையில் சிறுமிக்கு வயிற்று வலி வர, மருத்துவர் ஸ்கேன் செய்யுமாறு கூறியுள்ளார். ஆனால் பெற்றோர் அதை கவனிக்காமல் இருந்துவிட்டனர்.

மாதங்கள் கழிந்து சிறுமிக்கு ஆண் குழந்தை இறந்து பிறந்துள்ளது. அதனால் சிறுமி குழந்தை சடலத்தை எடுத்து புதைத்துள்ளார். சிறுமியை காதலித்து ஏமாற்றி விவகாரத்தில் தரங்கம்பாடி போலீசார் இளைஞர் அபிமன்யு மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர். 

From Around the web