மது அருந்த பணம் தராத பாட்டியை வெட்டிக் கொன்ற பேரன்..!

 
மது அருந்த பணம் தராத பாட்டியை வெட்டிக் கொன்ற பேரன்..!

மது அருந்த பணம் தருவதற்கு மறுத்த மூதாட்டியை அவருடைய பேரன் அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் அர்ச்சலூர் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி மற்றும் ஜெலின் மேரி தம்பதியினருக்கு பூவிழிச் செல்வன் என்கிற மகன் உள்ளார். இவருக்கு ஷர்மிளா என்கிற மனைவியும் மகளும் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக மனநிலை பாதிப்புக்காக பூவிழிச் செல்வனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நேற்று அர்ச்சலூரில் இருக்கும் தன்னுடைய பெற்றோர் வீட்டிக்கு சென்றுள்ளார் பூவிழிச் செல்வன். அங்கு தாய் ஜெலின்மேரியிடம் மது அருந்துவதற்காக பணம் கேட்டு சண்டையிட்டுள்ளார். அப்போது ஜெலின்மேரி பணம் தர மறுத்து மகனை வீட்டை வீட்டு வெளியேற்றியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பூவிழிச் செல்வன் அருகிலிருந்த தனது 95 வயதான பாட்டி காளியம்மாளை அரிவாளால் சராமாரியாக வெட்டினார். இந்த சம்பவத்தால் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக மூதாட்டி உயிரிழந்தார். உடனடியாக தகவலறிந்த காவல்துறை ஆய்வாலர் சண்முகசுந்தரம் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டியின் உடலை கைப்பற்றினர்.

அதை தொடர்ந்து காளியம்மாளின் உடலை உடற்கூராய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை பூவிழிச் செல்வனை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது அவரிடம் மனநல மருத்துவர் உதவியுடன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

From Around the web