கணவனின் ‘அந்த’ இடத்தில் ஆசிட் ஊற்றிவிட்டு தப்பியோடிய மனைவி..!

 
கணவனின் ‘அந்த’ இடத்தில் ஆசிட் ஊற்றிவிட்டு தப்பியோடிய மனைவி

வாடகையை வசூலித்துவிட்டு தன்னிடம் சொல்லாமல் இருந்த கணவன் மீது மனைவி ஆசிட் ஊற்றிவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் கீழேதேவதானத்தைச் சேர்ந்த எழிலரசனுக்கு (42) அதே பகுதியில் சொந்தமாக வாடகை வீடுகள் உள்ளன. அவருடைய மனைவி காயத்ரி (42) எழிலரசனை பிரிந்து குழந்தைகளுடன் திருவெறுபூர் கைலாஷ் நகரில் தாயுடன் வசித்தி வருகிறார். 

எனினும் மாதந்தோறும் வாடகை பணத்தை மனைவிக்கு அவர் அனுப்பி வந்துள்ளார். இந்நிலையில் இம்மாத வாடகை பணத்தை வசூலித்துக் கொண்ட எழிலரசன் மனைவிக்கு கொடுக்காமல் இருந்துள்ளார்.

தீபாவளி செலவுக்கு பணமில்லாமல் தவித்த மனைவி, கணவன் வீட்டுக்கு சென்று பணத்தை கேட்டு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. 

அப்போது கையில் இருந்த அமிலத்தை கணவரின் தொடையில் ஊற்றிவிட்டார். தொடை வெந்து தவித்துப் போன எழிலரசன் அலறி துடித்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கணவர் மீது மனைவியை ஆசிட் ஊற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

From Around the web