திருநங்கையின் கையை பிடித்து இழுத்த போலீஸ்- அடுத்து நடந்தது இதுதான்..!

 
திருநங்கையின் கையை பிடித்து இழுத்த போலீஸ்- அடுத்து நடந்தது இதுதான்

செல்போன் தொலைந்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த திருநங்கையிடம் அத்துமீறிய காவலரை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் அம்மன் குளத்தைச் சேர்ந்த திருநங்கை பொது இடத்தில் தனது செல்போனை தொலைத்துவிட்டார். அதுதொடர்பாக ரேஸ்கோர்ஸ் பகுதி போலீசாரிடம் அவர் புகார் அளித்தார்.

செல்போன் தொலைந்து போனது தொடர்பாக விசாரிப்பதாக கூறி திருநங்கை வீட்டுக்கு சென்றுள்ளார் 50 வயதான காவலர். அங்கு விசாரணை நடத்திய போது, திருநங்கையிடம் அந்த போலீஸ்காரர் அத்துமீறியதாக தெரிகிறது.

திருநங்கையின் கையை பிடித்து இழுத்ததாகவும், அநாகரீகமான வார்த்தைகளை கூறி பேசியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட திருநங்கை போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார்.

இது தொடர்பாக கோயம்புத்தூர் ரேஸ்கோர்ஸ் பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புகாரில் சிக்கிய காவலர் தலைமறைவாகிவிட்டார். 


 

From Around the web