தோழியின் கணவரிடம் தகாத முறையில் பழகிய பெண்ணுக்கு நேர்ந்த துயரம்..!

 
தோழியின் கணவரிடம் தகாத முறையில் பழகிய பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

பாசமாக பழகிய தோழியின் கணவரை அபகரித்த பெண்ணை காதலன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் சாயிபாபா காலனியைச் சேர்ந்தவர் அஸ்வதி (20). தந்தை இறந்துவிட்டதால் திருமணம் ஆகாமல் தாயுடன் வசித்து வந்துள்ளார். அருகேவுள்ள பழக்கடையில் அஸ்வதி வேலைக்கு சென்று வந்த போது திருமணமான பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து அஸ்வதி அப்பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது தோழியின் கணவன் ஜெகனுடன் அஸ்வதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளிடைவில் தாகத உறவாக மாறியது. இருவரும் வீட்டுக்குள் நடந்துகொண்ட முறையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் தோழி.

இதையடுத்து கணவன் ஜெகனிடம் பிரிந்து சென்று தாய் வீட்டில் வசிக்க துவங்கினார். ஆனால் அப்போதும் ஜெகன் அஸ்வதியை விட்டு விலகவில்லை. இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுவதும் தனிமையில் நேரத்தை செலவிடுவதுமாக இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த நவம்பர் 5-ம் தேதி அஸ்வதி சாயிபாபா காலனியில் உள்ள வீட்டில் சடலமாக கிடந்துள்ளார். அவருடைய உடலை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்த போது, அஸ்வதி கழுத்தை நெறித்துக் கொன்றது தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து விசாரித்ததில் இளம்பெண் அஸ்வதியை ஜெகன் கொலை செய்தது உறுதியானது.

கோயம்புத்தூர் மாவட்ட போலீசார் பல நாட்களாக ஜெகனை தேடி வந்தனர். சமீபத்தில் அவர் ஊட்டியில் இருப்பதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று விசாரித்ததில் குற்றவாளி ஜெகனை கைது செய்து வாக்குமூலம் பெற்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From Around the web