சொல்பேச்சை கேட்காமல் ஆற்றைக் கடந்த வாலிபருக்கு நேர்ந்த பரிதாபம்..!

 
சொல்பேச்சை கேட்காமல் ஆற்றைக் கடந்த வாலிபருக்கு நேர்ந்த பரிதாபம்

விவசாயி ஒருவர் கரைபுரண்டு ஓடும் ஆற்றை கடக்க முயன்று வெள்ளப்பெருக்கில் சிக்கி கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமூகவலைதளத்தில் எவ்வளவு தடுத்தும் ஒருவர் ஆற்றைக் கடக்க முயன்று அடித்துச் செல்லப்பட்ட காட்சி வைரலாக பரவி வந்தது. தற்போது இந்த சம்பவம் எங்கு நடந்தது என்கிற விபரங்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பெய்த கனமழை காரணமாக விட்டல்பட்டி என்கிற ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சாப்டூர் - ராமசாமிபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜசேகரின் தோட்டம் ஆற்றைக் கடந்து அமைந்துள்ளது.

சம்பவம் நடைபெற்ற அன்று வழக்கம் போல தோட்டத்துக்கு செல்ல விட்டல்பட்டி ஆற்றை கடக்க ராஜசேகரன் முயன்றுள்ளார். அப்போது அவரை உறவினர் தடுத்து நிறுத்தியுள்ளார். ஆனால் பேச்சை கேட்காமல் அவர் ஆற்றை கடந்து செல்ல முயன்றார்.

இதில் அடித்துச் செல்லப்பட்ட அவர், 4 கி.மீ தொலைவுக்கு அப்பாலுள்ள கண்மாயில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ராஜசேகரனின் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

From Around the web