இன்சூரன்ஸ் பணத்துக்காக கணவனை காரில் வைத்து கொளுத்திய மனைவி கைது..!

 
இன்சூரன்ஸ் பணத்துக்காக கணவனை காரில் வைத்து கொளுத்திய மனைவி கைது..!

கார் தீப்பற்றி எரிந்த சம்பவத்தை ஒருவர் உயிரிழந்த நிலையில், இறந்துபோன நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் திருப்பூருக்கு அருகேவுள்ள அவிநாசி பகுதியில் சாலை விபத்தில் துடுப்பதி கிராமத்தை சேர்ந்த ரங்கராஜன் என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை கடந்த 8-ம் தேதி மனைவி ஜோதிமணியூம், அவரது உறவினர் ராஜாவும் காரில் திருப்பூருக்கு அழைத்துச் சென்றனர்.

பொரசிபாளையம் என்கிற இடத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது ஜோதிமணியும், ராஜாவும் வெளியே குதித்து உயிர் தப்பினர். காருக்குள் சிக்கிக்கொண்ட ரங்கராஜன் காரோடு தீயில் கருகி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் ரங்கராஜன் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். காரில் இருந்த 3 பேரில் ஒருவர் மட்டும் உயிரிழந்ததால் ஜோதிமணி மற்றும் ராஜாவின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

உடனடியாக இந்த சம்பவத்தை சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். ஜோதிமணி மற்றும் ராஜாவிடம் போலீசார் கிடுக்குப்பிடி போட்டி விசாரணை செய்தனர். அப்போது ரூ. 3 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக காரோடு கணவரையே பெட்ரோல் ஊற்றி மனைவி எரித்து கொன்ற அதிர்ச்சி தகவல் போலீசாருக்கு தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர். இன்சூரன்ஸ் பணத்துக்காக கணவரை உயிரோடு பெட்ரோல் ஊற்றி காருடன் எரித்த மனைவி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

From Around the web