கள்ளக்காதலன் முகத்தில் கொதிக்கும் பாமாயில் ஊற்றிய பெண் கைது.!!
வேறொரு பெண்ணை திருமணம் செய்யவிருந்த கள்ளக்காதலன் முகத்தில் மீது கொதிக்கும் பாமாயிலை ஊற்றிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் கார்த்திக், பெருந்துறையிலுள்ள பனியன் ஆலையில் பணியாற்றி வருகிறார். அதே கம்பெனியில் தன்னுடன் பணியாற்றும் திருமணமான மீனாதேவி என்பவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். சமீபத்தில் வேறொரு பெண்ணுடன் கார்த்திக்கிற்கு திருமணம் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் கடந்து சில நாட்களாகவே கள்ளக்காதலர்களுக்கு இடையில் பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 11-ம் தேதி பவானி மண்டபம் பகுதியில் இருக்கும் மீனாதேவி வீட்டுக்கு கார்த்தி சென்றுள்ளார். அங்கு திருமணம் தொடர்பாக மீண்டும் இருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த மீனாதேவி, அடுப்பில் சூடாக இருந்த பாமாயிலை கார்த்தி முகத்தில் ஊற்றிவிட்டார். இதனால் அலறித் துடித்த கார்த்தியின் சேர்த்து, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறை மீனாதேவியை கைது செய்தனர்.
அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில் தன்னை ஏமாற்றிவிட்டு கள்ளக்காதலன் கார்த்திக் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய இருந்தார். அந்த ஆத்திரத்தில் அவர் மீது கொதிக்கும் பாமாயிலை ஊற்றிவிட்டதாக கூறினார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை, மீனாதேவியை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.