மளிகைக் கடைக்குள் புகுந்து பெண் கழுத்தறுத்து கொலை..!

 
கொலை செய்யப்பட்ட இந்திராணி

மளிகை கடையை கவனித்துக் கொண்டிருந்த பெண்ணை அடையாளம் தெரியாத நபர் கத்தியால் கழுத்தறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் துரைச்சாமிபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன் (45). இவருடைய மனைவி இந்திரணி (42) வீட்டின் அருகே இருக்கும் பலசரக்கு கடையில் வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்தார்.

கணவன் கணேசன் வெளியே சென்றிருந்த போது இந்திராணி கடையில் தனியாக இருந்துள்ளார். அப்போது கடைக்குள் திடீரென புகுந்த மர்மநபர் இந்திராணியை கழுத்தில் அறுத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டான்.

ராஜபாளையம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் தலைமையில் சம்பவ இடத்துக்கு வந்து இந்திராணியின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இக்கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

From Around the web