கடவுள் ஆஞ்சநேயர் திருமலையில் தான் பிறந்தார்- திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு..!

 
கடவுள் ஆஞ்சநேயர் திருமலையில் தான் பிறந்தார்- திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு..!

ராம பக்தரான ஆஞ்சநேயர் திருமலையில் அமைந்துள்ள சேஷாசல மலைதொடரில் தான் பிறந்தார் என திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வெங்கடாசல மகாத்மியம் என்கிற புராணத்தில் கடவுள் ஆஞ்சநேயரின் பிறப்பிடம்  திருப்பதி திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி மலை என்று கூறப்பட்டுள்ளது. இதே தகவலை பல்வேறு புராணங்களும் இதிகாசங்களும் உறுதி செய்கின்றன. இதுகுறித்து ஆய்வு செய்ய முடிவெடுத்த திருப்பதி தேவஸ்தானம், தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் முரளிதர சர்மா தலைமையிலான வல்லுநர்கள் குழுவை நியமித்தது. 

தொடர்ந்து நான்கு மாதங்களாக இதுகுறித்து அவர்கள் ஆய்வில் ஈடுபட்டனர். அதன்படி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முன்னிலையில் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜபாலி தீர்த்தம் என்ற இடத்தின் அருகே ஏழுமலைகளில் ஒன்றான அஞ்சனாத்ரி பகுதிதான் அனுமார் பிறந்த இடம் என்பதை உறுதி செய்துள்ளனர். இது திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வடக்கே 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. 

முன்னதாக கர்நாடகாவில் உள்ள ஹம்பி என்ற இடத்தில் தான் கடவுள் ஆஞ்சநேயர் பிறந்ததார் என்று நம்பப்பப்பட்டு வந்தது. அதேபோல ஜார்க்கண்டில் உள்ள அஞ்சன் மலைப்பகுதியும், குஜராத்தின் மாநிலத்திலுள்ள நவ்சாரி போன்ற இடங்கள் அனுமனின் பிறப்பிடமாக கூறப்பட்டது. இதனால் திருப்பதி தேவஸ்தானத்தின் அறிவிப்பு பல்வேறு ஆய்வாளர்கள் மற்றும் ஆன்மிக ஆய்வாளர்களிடையே விவாதத்தை கிளப்பியுள்ளது. 

From Around the web