குளிர்காலத்தில் கற்றாழை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்... தவறாமல் யூஸ் பண்ணுங்க..!

 
1

கற்றாழை பொதுவாக ஆற்றங்கரைகளிலும், சதுப்பு நிலங்களிலும், தோட்டங்களிலும் அதிகமாக காணப்படுகிறது. கற்றாழையில் கால்சியம், குளோரின், சோடியம், பொட்டாசியம், மாங்கனீசு, வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, பாலிசாக்கரைடுகள் மற்றும் யூரிக் அமிலம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.

கற்றாழையிலிருந்து எடுக்கப்படும் ‘ஜெல்’ சருமத்தின் ஈரத்தன்மையை (Moisture) பாதுகாக்க பயன்படுகிறது. மேலும் அனைத்து தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கும் கற்றாழையை பயன்படுத்தலாம். பொலிவான சருமத்தை பெறவும், அடர்த்தியான கூந்தலுக்கும் கற்றாழையை உபயோகிக்கலாம். கற்றாழை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும், அதன் பக்கவிளைவுகள் குறித்தும் நாம் இங்கு தெரிந்து கொள்வோம்.

வறண்ட சருமத்திற்கு ஊட்டமளித்தல்:

குளிர்காலம் வந்துவிட்டாலே சருமம் வறண்டு போய்விடும். இதற்காக மாய்ஸ்சரைசர்கள் எல்லாம் நாம் பயன்டுத்துவோம். ஆனால் இயற்கையாக வறண்ட சருமத்தை சரிசெய்ய வேண்டும் என்றால் கற்றாழையை நீங்கள் உபயோகிக்கலாம். கற்றாழையில் நிறைய திரவம் இருப்பதால் சருமத்திற்கு பயனுள்ளதாக உள்ளது.

Aloe-vera

கரும்புள்ளிகளை நீக்குதல்:

கற்றாழையில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகளவில் உள்ளதால், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்ற உதவியாக உள்ளது. எனவே சிறிது கற்றாழை சாற்றைத் தினமும் இரவில் முகத்தில் அப்ளே செய்து, அடுத்த நாள் காலை தண்ணீரில் நீங்கள் கழுவும் போது கருமை நீங்கி முகம் மிகவும் பொலிவுடன் காணப்படும்.

தோல் பராமரிப்பு:

நம்மை அறியாமலேயே சில நேரங்களில் ஏதாவது கீறல்களினால் புண்கள் ஏற்படும். இந்த புண்களுக்கு நீங்கள் எந்த மருந்தும் உபயோகிக்க வேண்டும். கற்றாழை சாறைக் கொஞ்சம் புண்கள் உள்ள இடத்தில் தடவினால் போதும் வடுக்கள் எதுவும் இல்லாமல் ஆறிவிடும். தீக்காயங்களைக் குணப்படுத்தவும் உதவியாக உள்ளது.

முகப்பரு இல்லாத சருமம்:

பெண்கள் மற்றும் ஆண்கள் சந்திக்கும் சரும பிரச்சனைகளில் ஒன்று முகப்பருக்கள். இது நம்முடைய அழகைக் கெடுப்பதோடு தன்னம்பிக்கையையும் இழக்கச் செய்கிறது. இதற்காக சந்தைகளில் விற்பனையாகும் பல பேசியல் கிரீம்களை உபயோகிப்போம். ஆனால் இயற்கையாக சரி செய்ய வேண்டும் என்று நினைத்தால் கற்றாழையை நீங்கள் தேர்வு செய்யலாம். இதில் உள்ள கிருமி நாசினிப் பண்புகள் பாக்டீரியாக்களை அகற்றி முகப்பருக்களை நீக்க உதவியாக உள்ளது. எனவே தினமும் நீங்கள் கற்றாழை ஜெல்லை உங்களது சருமத்தில் அப்ளே செய்யலாம்.

Aloe-vera

பளபளப்பான மற்றும் மென்மையான கூந்தல்:

கற்றாழையில் உள்ள புரோட்டியோலிடிக் என்சைம்கள் கரடுமுரடான மற்றும் வறண்ட கூந்தலுக்கு சிகிச்சையளிக்கும் திறனைக் கொண்டுள்ளது. மேலும் கற்றாழை ஜெல்லை நீங்கள் உபயோகிக்கும் போது உச்சந்தலையில் உள்ள இறந்த செல்களை மீண்டும் உருவாக்க உதவுகின்றன. இதோடு இரத்த ஓட்டத்தை ஊக்குவிப்பதன் மூலம் புதிய முடி வளர்ச்சியைத் தூண்டுகின்றன.

பொடுகு பிரச்சனைக்குத் தீர்வு:

பெண்களைப் போலவே ஆண்களுக்கும் பொடுகு பிரச்சனை என்பது நாளுக்கு நாள் அதிகமாகிவிட்டது. எத்தனை ஷாம்புகள் உபயோகித்தாலும் உடனடியாக தீர்வு முடியாது. ஆனால் கற்றாழையில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்புக் குணங்கள் பொடுகு பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண்கிறது. மேலும் இதில், இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும் புரதம் மற்றும் இரும்புச்சத்து அதிக அளவில் இருப்பதால் பொடுகு மற்றும் முடி உதிர்தலுக்கு சிகிச்சையளிக்கிறது.

From Around the web