பப்பாளி பழத்தில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கா ?
Jun 23, 2022, 13:44 IST
நமது நாட்டில் அதிகம் கிடைக்கும் பழங்களில் ஒன்று பப்பாளிப் பழம். விலையும் குறைவு... சத்தும் அதிகமாக இருக்கும். மிக மிகக் குறைந்த கலோரி பப்பாளியில் தான் உள்ளது. வாரத்துக்கு இரண்டு முறை பப்பாளியை சேர்த்துக்கொண்டால் நோய் நம்மை விட்டு தள்ளி நிற்கும்.
- பப்பாளியில் விட்டமின் C, A, E சத்துக்கள் அதிகளவில் நிறைந்திருப்பதால் கண்களுக்கு நல்லது.
- பப்பாளிக்காயை குழம்பாக செய்து சாப்பிட்டால், பிரசவித்த பெண்களுக்கு பால் நன்றாக சுரக்கும்.
- பப்பாளியை உண்பதால் செல்கள் வயதாவதைக் கட்டுப்படுத்தும்.
- பழுத்த பழத்தை சாறில் தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வந்தால் முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.
- குழந்தைகளுக்கு பப்பாளிப்பழத்தை அடிக்கடி கொடுத்து வந்தால் உடல் வளர்ச்சி விரைவாக இருக்கும். எலும்பு , பல் உறுதி ஏற்படும்.
- பப்பாளிப்பழத்தை தேனில் தோய்த்து உண்டு வந்தால், நரம்புத்தளர்ச்சி விரைவில் குணமாகும்.
 - cini express.jpg)