பெண்கள் கொத்தமல்லியை கஷாயம் வச்சி குடிச்சா...

 
1

 பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் ஒரு சுகாதார பிரச்சினை ஒழுங்கற்ற மாதவிடாய் ஆகும் .இதனால் அவர்கள் கடும் மன அழுத்தத்தை சந்தித்து வருவார்கள் .அதுவும் இந்த கொரானா காலத்தில் இன்னும் இந்த கோளாறால் கடும் சுகாதார பிரச்சினையை சந்தித்து வருவார்கள் .பெண்களின் வயிற்றுக்குள்ளே கருப்பை உள்ளது .இதிலிருந்து ஒவ்வொரு மாதமும் ஹார்மோன் மாற்றத்தால் மாதவிடாய் உதிர போக்கு ஏற்படுகிறது .இது 28 நாட்களுக்கு ஒருமுறை வந்தால் அது நார்மலான மாதவிடாய் காலம் ஆகும் .அதுவே 35 நாள் 40 நாளைக்கொரு முறை என்று வந்தால் அதுதான் முறையற்ற மாதவிடாய் ஆகும் .

Coriander

இந்த கோளாறுக்கு  கொத்தமல்லியை கஷாயம் வைத்து குடித்தாலும், வேறு பல வகைகளில் பக்குவம் செய்து உண்பதாலும் மாதவிடாய் கால ரத்த போக்கும் குறைந்து ,முறையாக மாதவிலக்கு வரும் .

மேலும்  மாதவிடாய் ரத்தப்போக்கு அதிகம் உள்ள காலங்களில் கோதுமை மாவை கஞ்சி வைத்து குடித்தால் போதும் ரத்தப்போக்கு நின்று ஆரோக்கியமான முறையில் மாத விடாய் வரும் 

சாதம் வடித்த கஞ்சியில், அதற்கு சரிபாதி அளவில் பசுமோரை கலந்து கலக்கி குடிக்க ரத்த போக்கு சீராகி முறையான மாத விடாய் வரும் .

அடுத்து மாங்கொட்டை உள்ளிருக்கும் பருப்பை வெயிலில் காய வைத்து, தூளாக்கி தேனில் குழைத்து தினமும் காலையிலும் மாலையிலும் உண்டு,வெந்நீர் குடித்து வர பீரியட்ஸ் பிரச்சினைக்கு சிறந்த நிவாரணம் கிடைக்கும்

From Around the web