குழந்தைகளுக்கு சத்துக்கள் தரும் சிறுகீரை சூப்!!

 
1

குழந்தைகளுக்கு சத்தான உணவை தினந்தோறும் கொடுக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் சூப் குழந்தைகளுக்கான சிறந்த உணவு. இன்று சிறுகீரை சூப் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
சிறுகீரை – அரை கட்டு
பருப்பு தண்ணீர் – 1 கப்
மிளகு, மஞ்சள் தூள் – தலா ஒரு சிட்டிகை
இந்துப்பு – ஒரு சிட்டிகை
சீரகம் – ½ டீஸ்பூன்
சிறுகீரை சூப்

செய்முறை
சிறுகீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பொடியாக நறுக்கிய சிறுகீரையை, சீரகம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.

நன்கு வெந்ததும் அதில் பருப்பு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
கீழே இறக்கி வைப்பதற்கு முன் மிளகுத்தூள், இந்துப்பு சேர்த்து இறக்கி விடலாம்.

From Around the web