பப்பாளி பழம் இவர்கள் அதிகமாக சாப்பிட கூடாது.. ஏன் தெரியுமா ? 

 
1
பப்பாளி அதிகமாக உட்கொண்டாலோ அல்லது ஒரு சில நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் உட்கொண்டாலோ சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது இதை பற்றி பார்ப்போம். குறைந்த கலோரிகள் கொண்ட பப்பாளிப்பழம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது.

இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. நல்ல செரிமானத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டது. பப்பாளியின் ஒவ்வொரு பகுதியையும் நாம் உட்கொள்ளலாம். இதில் பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டி-ஆக்சிடன்ட்கள் கரோட்டினாய்டுகள் அதிகம் உள்ளது. இது பார்வையை அதிகரிக்க உதவுகிறது. பப்பாளி நீண்டகாலமாகவே இறைச்சியை மென்மையாக்கும் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனைகளை எளிதில் குணப்படுத்தும். பல ஆரோக்கிய நன்மைகளை கொண்ட இந்த பப்பாளிப்பழம் ஒரு சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது.

1

சுகாதார நிபுணர்களின் தகவல் படி கர்ப்பிணிப்பெண்கள் பப்பாளியை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என சொல்கிறார்கள். அதுவும் பப்பாளி பழத்தில் அதிக அளவு லேடெக்ஸ் காணப்படுகிறது. இது கருப்பை சுருக்கத்தை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. பப்பாளியில் இருக்கக்கூடிய பாப்பைன் கருவின் வளர்ச்சிக்கு அவசியமான உடலில் உள்ள சில சவ்வுகளை சேதப்படுத்தலாம் எனவும் சொல்லப்படுகிறது.

அதிக அளவு பப்பாளி பழத்தை உட்கொள்வது செரிமானப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. பப்பாளியில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்களுக்கு சிறந்த ஒன்றாக இருக்கும். அதேநேரத்தில் இதை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் பொழுது வயிற்றுப் பிரச்சனைகளை ஏற்படுத்த காரணமாக அமைந்துவிடும். பப்பாளி பழத்தின் தோலில் லேடெக்ஸ் உள்ளது. இது வயிற்றில் எரிச்சல், வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். அதிக அளவு பப்பாளிப் பழம் சாப்பிடும் பொழுது அதில் இருக்கக்கூடிய நார்ச்சத்து மலத்துடன் பிணைக்கப்பட்டு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தி நீரிழப்பை உண்டாக்கும் எனச் சொல்லப்படுகிறது.

பப்பாளி பழம் ரத்தத்தை மெல்லியதாக்கும் குணம் கொண்டது. ரத்தத்தை மெல்லியதாக்கும் மருந்துகளை சாப்பிட்டுக் கொண்டு வருபவர்கள் பப்பாளி பழத்தையும் சேர்த்து சாப்பிடும் பொழுது இது ரத்தப் போக்கை ஏற்படுத்தும். அதனால் ரத்தத்தை மெல்லியதாக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பப்பாளி பழத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும் சொல்லப்படுகிறது.

அதிக அளவு பப்பாளி பழம் எடுத்துக்கொள்வது ரத்த சர்க்கரை அளவை குறைப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது நீரிழிவு நோய்க்கு தொடர்ந்து மருந்துகள் எடுத்துக் கொண்டு வருபவர்களுக்கு ஆபத்தாக மாறும் என்று சொல்லப்படுகிறது. நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள் அதற்காக மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று பப்பாளி பழத்தை எடுத்துக் கொள்வது சிறந்தது எனவும் சொல்லப்படுகிறது.

1

ஒரு சிலருக்கு சில பழங்களை சாப்பிடும் பொழுது ஒவ்வாமை பிரச்சனை ஏற்படும். அப்படி பப்பாளி ஒரு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். அப்படிப்பட்டவர்கள் பப்பாளி பழத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என சொல்லப்படுகிறது.

பப்பாளி பழத்தில் இருக்கக்கூடிய பாப்பைன் என்ற நொதி ஒவ்வாமை ஏற்படுத்தும் திறன் கொண்டதாக சொல்லப்படுகிறது. அதிக அளவில் பப்பாளி பழத்தை எடுத்துக் கொள்ளும் பொழுது அது ஆஸ்துமா, மூச்சுத்திணறல் போன்ற பல்வேறு சுவாச கோளாறுகளை ஏற்படுத்தும் எனவும் சொல்லப்படுகிறது. சுவாசப் பிரச்சனை இருப்பவர்கள் அதிக அளவு பப்பாளி பழத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது என்று சொல்லப்படுகிறது.

இதய நோய் இருப்பவர்கள் பப்பாளிப் பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என சொல்லப்படுகிறது. ஏனென்றால் அதிக அளவு பப்பாளி பழத்தை சாப்பிடும் பொழுது அது இதயத் துடிப்பை குறைத்து இதய நோயாளிளுக்கு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்று சொல்லப்படுகிறது.

அறுவை சிகிச்சை செய்தவர்கள் ஒரு சில வாரங்களுக்கு பப்பாளி பழத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என சொல்லப்படுகிறது. ஏனென்றால் ஒரு சில நேரங்களில் இது அறுவை சிகிச்சையினால் ஏற்பட்ட காயத்தை ஆற விடாமல் செய்யும் என சொல்லப்படுகிறது.

எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவது ஆபத்தை ஏற்படுத்தும். இது பப்பாளிக்கும் பொருந்தும். பப்பாளிப்பழம் நல்லது தான். ஆனால் ஒரு சில நோய் அறிகுறிகள் இருப்பவர்கள், மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவரின் அறிவுரைப்படி பப்பாளி பழத்தை எடுத்துக் கொள்வது நல்லது. அதுபோல அதிக அளவு பப்பாளிப்பழத்தை சாப்பிட்டாலும் அது ஆபத்தை ஏற்படுத்தும். சரியான அளவில் தேவைக்கு பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு அதனுடைய ஆரோக்கிய நன்மைகளைப் பெறுங்கள்.

From Around the web