கொசுவை விரட்டும் தன்மை இருக்கும் தேங்காய் நார் ?

 
1

 கொசுத் தொல்லையிலிருந்து விடுபட பலரும் கெமிக்கல்கள் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துகின்றனர்.ஆனால் கொசு விரட்டிகளை பயன்படுத்துவதால், ஆஸ்துமா, சளி, இருமல் இருப்பவர்களுக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாமல் பாதிப்பு ஏற்படும். இது தவிர சிலருக்கு கண் எரிச்சல், சருமப் பிரச்சனைகளும் உருவாவதாக கூறப்படுகிறது.

இதைத் தவிர்க்க இயற்கையான முறையில் கொசுவிரட்டி செலவில்லாமல் வீட்டிலேயே உள்ளது. தேங்காயின் நார்களை எரித்தால் வரும் புகைக்கு கொசுக்கள் அனைத்தும் ஓடிவிடும்.

இதனால் கொசுக்கள் அழிவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். தற்போது தேங்காய் நார்கள் கூட கடைகளில் விற்கப்படுகிறது. கொசுக்கள் அழிய சல்பர் தேவைப்படும். கற்பூரம் சல்பரில் தயாரிக்கப்படுகிறது.

ஆனால், கற்பூரத்தை அப்படியே வைக்காமல் ஒரு தட்டில் வைத்து, எரித்து வீட்டைச் சுற்றி காண்பித்தால், கொசுக்கள் அந்த வாசனைக்கு வராது.ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, அதில் கற்பூரத்தைப் போட்டு வைத்தால், அதில் இருந்து வரும் வாசனையிலேயே கொசுக்கள் வீட்டை விட்டு ஓடி விடும்.

From Around the web