கோடையில் முடி உதிர்தலை தடுக்க 4 பயனுள்ள தீர்வுகள்

கோடை காலத்தில் சிலருக்கு அதிக முடி உதிரும் பிரச்னை இருக்கும். இதை நிவர்த்தி செய்ய நாம் செய்யக்கூடிய சில வழிமுறைகள் உள்ளன. அதை முயற்சித்து பார்க்கலாம்.
 
hair loss

வெயில் காலத்தில் சருமத்தில் மட்டுமல்லாது சிலருக்கு தலைமுடியிலும் பிரச்னைகள் வருவது சகஜமாக இருக்கும். முடி உதிர்வு, தலையில் இருந்து எண்ணெய் வழிவது, சீக்கரம் கேசம் வறண்டு போவது என பல்வேறு பிரச்னைகள் கோடைக் காலத்தில் ஏற்படக்கூடும். கோடையில் முடி கொட்டுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நம் சருமத்தை போலவே முடியும் காலநிலை மாற்றத்தை சந்திக்கிறது. இதன்காரணமாக அதனுடைய ஆரோக்கியத்தில் சில மாறுபாடுகள் நிகழ்கின்றன. அதன் பக்க விளைவு தான் கோடையில் முடி உதிர்வு ஏற்படுகிறது.

புற ஊதாக் கதிர்கள் முடியைத் தாக்கும் போது, ​​முடியைப் பாதுகாக்கும் க்யூட்டிகல் பலவீனமடைகிறது. இதனால் முடியின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, முடி உடைந்துவிடுகிறது. இது தவிர முடியில் வியர்வை தங்கும் போது, ​​முடி உதிர்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. கோடையில் முடி உதிராமல் தடுப்பதற்கு சில தீர்வுகள் உள்ளன. அதற்கு சில வழிமுறைகளை நாம் கற்றுக்கொள்ள வேண்டியது முக்கியம்.

நீளத்தைக் குறைத்தல்

hair cut

நீளமான முடியை சிறிது வெட்டிக்கொள்வது நல்லது. இது ஆணுக்கும் பெண்ணுக்கும் என இருவருக்குமே பொருந்தும். குளிர்காலத்தில் முடி வளர்ச்சி விகிதம் சற்று அதிகமாக இருக்கும். அதாவது, முடி வளரும் நிலையான அனாஜென் நிலைக்கு முடி நுழையும். அதனால் கோடையிலும் இது தொடரும். எனவே, இந்த நேரத்தில் முடி வேகமாக வளரும். ஆனால் குளிர்காலத்தில் முடிக்கு கிடைக்கும் உறுதித் தன்மை, கோடையில் கிடைக்காது. அதனால் வெயில் பட பட முடி உடைந்து உதிரத் துவங்கும். அதன்காரணமாக முடியின் நீளத்தை குறைத்துக்கொள்ளுங்கள்.

ஆமணக்கு எண்ணெய்

castor oil

விளம்பரப்படுத்தப்பட்ட எண்ணெய்களை வாங்குவதற்கு பதிலாக, ஆமணக்கு எண்ணெய் தடவினால் போதும். முடிக்கு நல்லபடியான உறுதி கிடைக்கும். ஒருவேளை ஆமணுக்கு எண்ணெய் தேய்ப்பதில் தயக்கம் இருந்தால், தேங்காய் எண்ணெய் முடி ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இதிலிருக்கும் லாரிக் அமிலம் முடியை விரைவாக ஆரோக்கியமாக்கிவிடுகிறது.

ஈரமாக முடி இருக்கக்கூடாது

wet hair

எப்போதும் முடி ஈரமாக இருக்கையில் சீவக்கூடாது. முடி ஈரமாக இருக்கையில், அது சற்று தளர்வாக இருக்க்கும். அதன் வேர் பலவீனமாக இருக்கும். அப்போது நீங்கள் சிப்புக் கொண்டு சீவினால் கையில் கொத்து கொத்தாக முடி வந்துவிடும். இவை அனைத்தும் முடி உதிர்தல் மற்றும் முடி வேர்களுக்கு சேதம் விளைவிக்கும். டவலால் மிகவும் கடினமாகவும் அழுத்தக்கூடாது. எப்போதும் முடியை மிகவும் மென்மையாக கையாளுங்கள்.

சில உணவுகள் முக்கியம்

protein foods

சில உணவுகளை சாப்பிடுவது நல்லது. கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க முட்டையின் வெள்ளைக்கரு மிகவும் சிறந்தது. இது புரதம் என்பதால் நன்மை பயக்கும். மீன் நல்லது. பருப்பு மற்றும் பட்டாணி கூட நன்மை பயக்கும். வைட்டமின் சி புரத தொகுப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது முடியை ஆரோக்கியமாக்கும்.
 

From Around the web