பிறந்தவுடன் குழந்தை ஏன் அழுகிறது தெரியுமா?

 
பிறந்தவுடன் குழந்தை ஏன் அழுகிறது தெரியுமா?

 

பொதுவாக பிறந்த உடன் குழந்தைகள் அழத் தொடங்குகின்றன. அழவில்லை என்றால் அந்தக் குழந்தைக்கு உடலில் ஏதோ கோளாறு என்று மருத்துவர்களும், குடும்பத்தார்களும் பதறுவார்கள்.  அப்படி குழந்தை அழுவதற்கு பல காரணங்கள் சொல்வார்கள் என்றாலும் பிறந்த குழந்தை எதற்கு அழுகிறது என்று கண்டுபிடிப்பது மிகப் பெரிய கலை.  

ஆனால், பிறந்தவுடன் அழுவதற்கு சொல்லப்படும் முதல் காரணம்,  முதன் முதலாக வெளிக் காற்றை சுவாசிப்பது தான் என்று சொல்கிறார்கள்.  தாயின் கருப்பைக்குள், சுகமாக ஒரு தண்ணீர்த் தொட்டிக்குள் கிடக்கும் குழந்தை, நீரை விட்டு வெளி வருவது, முதன் முதலாக நீரில் இல்லாமல், காற்றை நேரடியாக சுவாசிப்பது என்று பல காரணங்களுக்கு அழுகிறது.  அடுத்து வெளிச்சம், சீதோஷ்ண நிலை போன்றவையும் பிறந்த குழந்தை அழ காரணமாகிறது. 

 அடுத்து முக்கியமான ஒன்று என்னவென்றால்,  ஒரு குழந்தை தாயின் கர்ப்பப் பையில் இருந்து வெளிவந்த உடன் தனக்கு பாதுகாப்பு இல்லாததாக உணர்கிறது.  அதுவும் ஒரு குழந்தை அழக் காரணமாக சொல்லப்படுகிறது.  பிறந்த குழந்தை அழுவதற்கு தற்போது புதிதாக ஒரு காரணத்தையும் சொல்கிறார்கள்.  அது என்னவென்றால், குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போது தாயின் இதயத் துடிப்பைக் கேட்டு சுகமாக ஒரு இசையை ரசிப்பது போல ரசித்தபடி இருக்குமாம்.  

அதுவே வெளி வந்த பின் தாயின் இதயத்துடிப்பை உணர முடியாமல் கதறி அழுகிறது.  அழும் குழந்தையை தாய் தன் மார்பில் போட்டு தட்டிக் கொடுக்கும் போது, குழந்தை தாயின் இதயத் துடிப்பைக் கேட்டு சமாதனமாகிறது.

From Around the web