மழை, குளிர் காலங்களில் சளி ஏற்படாமல் இருக்க இதை சாப்பிடுங்க... போதும்..!!

 
மழை, குளிர் காலங்களில் சளி ஏற்படாமல் தப்பிங்க இதை சாப்பிடுங்க

மழை மற்றும் அதை தொடர்ந்து வரவிருக்கும் குளிர் காலங்களில் சளி, இருமல், தொண்டை புண் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க இந்த இரண்டு பொருட்கள் இருந்தால் போதுமானது.

தமிழகத்தில் வடக்கிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. மாநிலத்தில் பாதி பகுதிகள் கடந்த சில வாரங்களாகவே வெயில் படவில்லை. பருவநிலை மாற்றம் காரணமாக சிலருக்கு உடல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படலாம்.

பொதுவாக இதுபோன்ற காலத்தில் சளி, இருமல், தும்மல், தொண்டையில் புண் உள்ளிட்ட பிரச்னைகள் சிலருக்கு ஏற்படக்கூடும். இதற்கு தீர்வு காண பல்வேறு வழிகள் இருந்தாலும், பாட்டி வைத்தியம் மூலமாக இதை எளிதில் சரி செய்யலாம்.

அதற்கு இரண்டு பொருட்கள் இருந்தால் போதும். அவை, தேன் மற்றும் எலுமிச்சை ஆகும். இவை இரண்டையும் சேர்த்து பயன்படுத்தும் போது நன்மைகள் இரட்டிப்பாக கிடைக்கும். ஆனால் அதற்கு என சில வழிமுறைகள் உள்ளன.

குழந்தைகளுக்கு கொடுக்கும் போது அதிக கவனம் வேண்டும். அளவு சரியாக பயன்படுத்தி கொடுப்பது பாதிப்பை குறைக்கும். ஒருவேளை அவர்களுக்கு கொடுக்கப்படும் வைத்தியம் அளவுக்கு அதிகமாக இருந்தால் பாதிப்பு உண்டாகும்.

பதின் பருவ வயதினரிடையே சளி, இருமல் தொந்தரவு அதிகமாக உள்ளது. அதிமதுரம், தேன், மிளகு, எலுமிச்சை என அனைத்தையும் மாற்றி மாற்றி பயன்படுத்துவதன் மூலம் குணமடையும். ஆனால் அதிக அளவு எடுத்தால் பாதுகாப்பானது அல்ல.

இப்போது தேன் மற்றும் எலுமிச்சையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம். கொதிக்கும் நீரில் எலுமிச்சை சாறு, தேன் இரண்டையும் தலா ஒரு டீஸ்புன் அளவு எடுத்து கலந்து குடிக்கலாம்.

தேன் வேண்டாம் என்றால், அதற்கு பதிலாக இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு கலவையை சுடு தண்ணீரில் ஊற்றி குளிரவைத்து பிறகு குடிக்கலாம். அப்போது ரொம்பவும் கசந்தால் தேன் சேர்த்துக் கொள்ளவும்.

பாரம்பரியமாகவே இருமல் சிகிச்சைக்கு எலுமிச்சை மற்றும் தேன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வழிமுறைகள் தற்காலிகமான தீர்வு தான் என்பதை நினைவில் கொள்ளவும். ஆனால் சாதாரண பிரச்னைக்கு இந்த வழிமுறைகள் போதுமானதாக இருக்கும்.
 

From Around the web