மழைக்காலத்தில் எந்தெந்த நிறங்களை தேர்வு செய்து ஆடை அணியலாம்..!

 
உடை தேர்வு செய்யும் அழகு

மாநிலத்தில் பருவமழை தொடங்கிவிட்டது. இன்னும் சில வாரங்களுக்கு அவ்வப்போது மழை விருந்தாளி போல வரும் போகும். இதனால் பலருக்கும் சந்தோஷம் தான் என்றாலும், திருத்தமாக ஆடைகளை அணிந்து ஃபேஷன் ஐக்கானாக வலம் வருபவர்களுக்கு இது பெரிய பிரச்னை என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

எனினும் மழைக்காலத்திலும் திருத்தமான ஆடைகளை தேர்வு செய்து குறித்தும், எப்படிப்பட்ட நிறங்களை தேர்வு செய்து ஆடைகள் அணியலாம் என்பதற்கான வழிமுறைகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

பருத்தி ஆடைகள் பொருத்தமானது

பருவமழை காலத்தில் பருத்தி ஆடைகளை தாராளமாக நம்பலாம். பாதுகாப்பான துணியாகவும் கண்களை கவரும் விதமாக இவை இருக்கும். பருத்தியை தேர்வு செய்துவிட்டால் மட்டும் போதாது, அதற்கேற்றவாறான ஆடை மற்றும் நிறத்தை தேர்வு செய்து மிகவும் முக்கியம். குழந்தைகளுக்கும் இவை பொருத்தமாக இருக்கும். பெண்கள் பருத்தியில் எப்படிப்பட்ட ஆடைகளையும் அணியலாம். ஆனால் முடிந்தவரை துப்பட்டா இல்லாமல் காலர் வைத்த சுடிதார், காலர் வைத்த சட்டை சரியாக இருக்கும். ஆண்களளுக்கு பருத்தி டீ-ஷர்ட் பொருந்தும்.

டேனிம் வேண்டவே வேண்டாம்

மழைக்காலத்தில் மண் ஏற்படுவது சகஜம். டேனிம் ஆடை ஃபேஷன் டிரெண்டிங்காகவே இருந்தாலும், மழை காலத்தில் இதை தவிர்ப்பது நல்லது. இதை கண்டுகொள்ளாமல் வெளியே சென்று திரும்பி வந்தால், நிச்சயம் உங்களுடைய டெனிம் ஆடையின் கீழ் பகுதிகளில் மண் ஏற்பட்டு இருக்கும். அதை துவைப்பதற்கு படாதபாடு பட வேண்டும் என்பது மட்டும் உறுதி. முக்கால் கால் பேண்டுகள், கிராப் டாப்ஸ்,காட்டன் டி-ஷர்ட்ஸ், ட்யூப் டாப்ஸ் போன்றவை டெனிமை காட்டிலும் சிறந்தது.

ஃபுல்-லென்த் பாட்டம்ஸ் கூடாது

மழையில் நனைய நீங்கள் விரும்பலாம். ஆனால் அப்போது டெனிம் பேண்டு மற்றும் ஃபுல்-லென்த் பாட்டம்ஸ் போன்றவற்றை அப்போது நீங்கள் அணிந்திருந்தால் உங்கள் பாடு திண்டாட்டம் தான். பெண்கள் பாலஸோ பேண்டுகள், மிடி ஸ்கெர்டுகள் போன்றவற்றை அணியலாம். ஆண்களுக்கு வைடு-லெக் டிரவுசர்ஸ், லூஸ் ஃபிட் கொண்ட பேண்டுகள் பொருத்தமாக இருக்கும்.

நிறங்களுக்கு வேண்டும் தேர்வுகள்

பருவமழை காலத்தில் மனம் அமைதியாக இருக்கும். மற்றவர்களுடன் உரையாடுவதற்கும், ப்ரியமானவர்களுடன் நேரம் செலவிடுவதற்கும் உகந்த தருணம். அதனால் இதுபோன்ற காலத்தில் அடர்ந்த நிறத்தில் ஆடைகளை அணியுங்கள். அதை உங்களை உயிர்ப்புடன் இருப்பது போல காட்டும். வெள்ளை மற்றும் பீஜ் நிற ஆடைகள் வேண்டாம். வைப்ரண்ட் தரும் இளஞ்சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறங்கள் சரியான தேர்வாக இருக்கும்.

செருப்பு போடுவதில் வேண்டும் பொறுப்பு

என்னதான் திருத்தமான பொருத்தமான ஆடைகளை அணிந்தாலும், அதை எடுத்துக் காட்டும் காலணிகள் மிகவும் முக்கியம். அதுவும் மழைக்காலத்தில் மிகவும் பிரதானமாகிறது. பெண்கள் உயர்ந்த காலணிகள், சில்லுவுட்டுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதேபோன்று தோள் மற்றும் வெல்வட் பொருட்களை வைத்து செய்யப்பட்ட காலணிகளும் உகந்தது கிடையாது. ரப்பர் காலணிகள், ஜெல்லி ஜூஸ், அடர்-நிறத்திலான ஃப்ளிப்-ஃபிளாப்ஸ் போன்றவை சரியான காலணிகளாக உள்ளன. ஆண்கள் வாட்ர்ஃப்ரூப் காலுறைகளை அணிந்து ஷூ போடுவதன் மூலம் மழைக்காலத்தில் பரவும் கிருமிகள் உடலுக்குள் வராமல் இருக்கும்.
 

From Around the web